அந்த மன்மதலீலை நடிகர் பல நடிகைகளுடன் டேட்டிங்கில் இருக்கான்!! உண்மையை உடைத்த வாணி போஜன்..

Ashok Selvan Vani Bhojan
By Edward Mar 24, 2023 10:45 AM GMT
Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெள்ளித்திரை நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை வாணி போஜன்.

சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் பரத்துடன் தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். இதுகுறித்த வதந்திகளை வாணி போஜன் காமெடியாக கருத்து தெரிவித்த நிலையில் நடிகர் அசோக் செல்வனை பற்றிய ரகசியத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் அசோக் செல்வன், தயாரிப்பாளரின் மகள் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் பரவியது.

இதுகுறித்து வாணி போஜனிடம் கேட்டபோது, அசோக் பல பெண்களிடம் டேட் செய்கிறானே எந்த பொண்ண நான் தேடுறது என்று கூறியதோடு அவன் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டான். எனக்கு அந்த கிசுகிசு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லோரிடமும் நட்பாக பழக்கக்கூடியவர். வரும் பெணை நன்றாக அசோக் செல்வன் பார்த்துக்கொள்வான் என்று வாணி போஜன் ஓப்பனாக கூறியிருக்கிறார்.