பிரபல விவாகரத்தான நடிகையின் ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகை வாணி போஜன்..
பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி ஆஹா என்ற சின்னத்திரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வாணி போஜன். இதன்பின் தெய்வத்திருமகள் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இதன்மூலம் சின்னத்திரை நயன் தாரா என்ற பெயரோடு ஜொலித்து வந்த வாணி வெள்ளித்திரை வாய்ப்புகள் வர சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டு படங்களில் சிறுசிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தார். செய்தி வாசிப்பாளராக இருந்ததற்கு முன் விமானப்பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார் வாணி போஜன்.
இதன்பின் ஓ மை கடவுளே படத்தில் ஹீரோயினாக நடித்து சிறப்பான பெயரை பெற்றார். தொடர்ந்து நடிகர் ஜெய்யின் ட்ரிபிள்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். விக்ரமின் மகான் படத்தில் நடித்த வாணி அப்படத்தில் அவரது காட்சிகள் நீக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தார்.
தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் அருண் விஜய்யுடன் நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி, பேட்டி என பிஸியாக இருந்து வருகிறார். அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை சமந்தா மிகவும் போல்டானவர். அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் படியாக அவருடைய செயல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.