உனக்கு இன்னும் வலிமை கூடும்! சமந்தாவுக்கு அட்வைஸா! எந்த நடிகை கூறி இருக்காங்க தெரியுமா?
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பல வதந்திகள் வெளியாகி அதிகாரப்பூர்வமாக விவாகரத்தினை அறிவித்தனர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா. இந்நிலையில் விவாகரத்து செய்தி வெளியான பின் கடந்த 6 ஆம்தேதி அவர்களின் திருமணநாளன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு டிரெண்ட்டாக்கினார் தற்போது விவாகரத்து கொடுத்த சில கஷ்டங்களை பகிர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தன்னை பற்றிய விவாகரத்து வதந்திகள் பல உருவானது. அதிலிருந்து பாதுகாத்தவர்களுக்கு நன்றி. அதிலும் குழந்தையில்லை, கருக்கலைப்பு, வேறொருவருடன் தொடர்பு என பல வதந்திகள் பரவியது. வலி மிகுந்தது விவாகரத்து. அதிலிருந்து மீள நேரம் கொடுங்கள். என்னை பற்றிய வதந்திகள் இடைவிடாமல் வந்துகொண்டிருக்கும். உறுதியாக கூறுகிறேன் அவர்கள் கூறுவது ஒருபோதும் என்னை உடைக்காது என உருக்கமாக கூறியுள்ளார்.
சமந்தாவோட இந்த குமுறல் யாருக்கு புரிஞ்சதோ இல்லையோ நம்ம வனிதா அக்காவுக்கு புரிஞ்சிடுச்சுங்க. உடனே சமந்தாவுக்கு ஆதரவா ஒரு பதிவு ஒன்னு போட்டிருக்காங்க. அவங்க என்ன சொல்லிருக்காங்கனா, “இங்கு சமூகம் என்று எதுவுமில்லை பேபி. உன் வாழ்க்கையை நீ வாழு. மக்கள் நாம போடுற போட்டோஸ மட்டும் தான் பார்ப்பாங்க. சமயத்துல வீடியோவும் தான். கவலை படுறதுக்கு எதுவுமில்லை.
நீ உன் வாழ்க்கையை நோக்கி முன்னாடி போய்கிட்டே இரு. உனக்கு இன்னும் வலிமை கூடும்” அப்படினு சொல்லிருக்காங்க. அது சரி வனிதா அக்கா சொன்னா சரியா தான இருக்கும். ஏன்னா இவங்க பார்க்காத பிரச்சனையா?