அசிங்கப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்! ஆக்ரோஷப்பட்ட வனிதா பேச இதுதான் காரணமாம்!

vanitha Biggboss VanithaVijayakumar BBJodigal RamyaKrishnan
By Edward Jul 29, 2021 03:34 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா. விஜயகுமாரின் மகளாக அறிமுகமாகியபின் குடும்ப பிரச்சனை 2 திருமணம் விவாகரத்து என பல பிரச்சனைகளை சந்தித்து இரு மகளுடன் வாழ்ந்து வந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நடன இயக்குநரை காதலித்து அதுவும் விடைபெற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கடந்த ஆண்டு பீட்டர்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் நீடிக்காமல் விவாகரத்தில் முடிந்துள்ளது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுரேஷ் இணைந்து ஆடிவந்தார். இதில் ஒரு சில வேறுபாடுகள் ஏற்பட்டதால் நடன நிகழ்ச்சியில் இருவரும் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்த நடனத்தை பார்த்து ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு 1.5 மதிப்பெண் கொடுத்தார். மேலும் மற்ற நடனமாடிவர்களிடம் ஒப்பீட்டு பேசியதால் வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதற்கு வனிதா விஜயகுமார் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் நான் ஒரு உண்மையான மனிதர் என் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விடுவேன்.

அது யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை திறமையை மதியுங்கள் ஒருநாள் உங்கள் இடத்திற்கு அவர்கள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது என கூறியுள்ளார்.