40 கல்யாணம் கூட பண்ணுவேன்! பத்திரிக்கையாளருக்கு கோபத்தை காட்டிய பிக்பாஸ் வனிதா...

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல சர்ச்சை பேச்சு நடத்தை என பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். 3 திருமணம் செய்து விவாகரத்து செய்த வனிதா தற்போது இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியரை திருமணம் செய்வதாக கூறி சர்ச்சை செய்தியை பிரபல பத்திரிக்கை வெளியிட்டதை கண்டித்தது. இதையடுத்து, வனிதா நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையுடன் ஒரு பு

கைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். பிக்கப் படத்தின் போஸ்டர் தான் என்று வெளியானதை தொடர்ந்து அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் 4 இல்ல 40 கல்யாணம் செய்வேன் என்று கூறியதற்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு எதார்த்தமான பதிலை அளித்துள்ளார். மேல் நாட்டில் தான் அதை சரியாக செய்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நாம் ஒருவருடன் இருக்கும் போது அவர்களுடன் உண்மையாக இருக்க வேண்டும். பின்னர் அவர்களிடம் உண்மையாக பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்தால் அந்த ஒருவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று புதிய அர்த்தத்தை கூறியுள்ளார். மேலும், வழக்கம் போல ஒரு தனி பெண்ணாக தான் சாதித்து காட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார் வனிதா.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்