ஜோவிகாவின் அப்பா நா இல்ல, உண்மையான அப்பா அவர் தான்!! பரபரப்பை கிளப்பும் வனிதாவின் 2ம் கணவர்..

Vijaykumar Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Dhiviyarajan Apr 16, 2024 05:00 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பியினருக்கு பிறந்தவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து சில படங்களை நடித்து வந்தார், ஆனால் அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. வனிதா விஜயகுமார் தனது 19-வது வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்த வனிதா விஜயகுமார்,அவரையும் சில வருடங்களில் விவாகரத்து செய்துவிட்டார்.

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, உண்மையான அப்பா அவர் தான்!! பரபரப்பை கிளப்பும் வனிதாவின் 2ம் கணவர்.. | Vanitha Ex Husband Says Jovika Is Not My Daughter

இந்நிலையில் வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் , வனிதாவுக்கும் எனக்கும் 2012 -ம் ஆண்டு விவாகரத்து ஆனது. அப்போது என் மகளுக்கு 3 வயது. அந்த சமயத்தில் வனிதா குழந்தையை என்னிடமே விட்டு சென்றுவிட்டார்.

ஆனால் பிக் பாஸ்ஸில் தாய், தாய் என்று பேசுகிறார். நான் தான என்னுடைய மகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன். என் குழந்தையின் படிப்பை கெடுத்தது வனிதா தான். ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை. IT யில் வேலை செய்து வந்த அருண் என்பவரின் மகள் என்று பகிர் குற்றச்சாட்டை வைத்துள்ளார் ராஜன்.      

You May Like This Video