பிக்பாஸ் 6ல் வனிதாவின் முன்னாள் காதலரா? அவரே உறுதி செய்த புகைப்படம்
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய்யில் 5 ஆண்டுகளாக மக்கள் ஆதரவை பெற்றும் டிஆர்பியில் எகிறவைத்தும் வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதற்கு முழு காரணம் இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதும் ஒரு முக்கிய பங்குதான்.
அப்படி கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 5 சீசனும் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9 ஆம்தேதி மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

பிக்பாஸ் 6 கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர் இணையத்தில் கசிந்து வந்த நிலையில் தற்போது முக்கிய நட்சத்திரம் வீட்டிற்குள் செல்லவுள்ளது உறுதியாகியுள்ளது.
அது, வனிதாவின் முன்னாள் காதலரும் நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டர் தான்.
முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த ராபர்ட் வனிதாவுடன் ரகசிய காதலில் இருந்து பின் அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது வாய்ப்பில்லாமல் ஆள் ஆடையாளம் தெரியாமல் இருந்து வந்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல 5 ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஹோட்டலில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.