நயன்தாராவை வைத்து நியாயம் பேசும் வனிதா! இதுவும் சரி தானே!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி தன்னை சமுகவலைத்தளங்களில் கேவளமாக பேசியும் விமர்சித்து வருபவர்களையும் சக்கபோடு போட்டு வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். 3 திருமணங்கள் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து வரை சென்றாலும் தன்னம்பிக்கை கொண்டு தற்போது பிக்பாஸ் குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றிகளை தொடர்ந்து படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சமீபத்தில், நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் பிக்கப் டிராப் படத்திற்காக போட்டோஹூட் எடுத்தது பெரியளவில் பேசப்பட்டது. அதற்கு காரணம் அவரின் விவாகர்த்து தான் என்று விமர்சித்து வருகிறார். ஆனால் வனிதா இதையெல்லாம் காதில் போடாமல் அதற்கு எதிராக நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன்,

அது என் விருப்பம் என்றார். அதையும் சமூக வலைதளவாசிகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் வனிதா ரசிகர்கள் புது பாயிண்ட்டை எடுத்துவிட்டுள்ளனர். அதாவது அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்திற்கு விளம்பரம் தேட ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று கூறி அழைப்பிதழை வெளியிட்டனர். படத்திற்கு விளம்பரம் தேட திருமண அழைப்பிதழை அதுவும் ஆர்யா, நயன்தாரா பெயரில் வெளியிட்டனர்.

அப்படி இருக்கும் போது வனிதா செய்ததில் தவறு இல்லை. நயன்தாராவுக்கு ஒரு நியாயும், வனிதாவுக்கு ஒரு நியாயமா என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். என்னதான் விமர்சித்தாலும் இப்போது பேசும் கூட்டம் எப்போதும் பேசாது என்றும் சிலர் கருத்துகளை கூறி வனிதாவிற்கு ஆறுதலாக இருந்து வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்