ரோபோ ஷங்கர் மரணம்.. மனைவி குறித்து வனிதா விஜயகுமார் சொன்ன அந்த விஷயம்!
ரோபோ ஷங்கர்
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ ஷங்கர் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் மயக்கம் அடைந்திருக்கிறார்.
உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலன் இன்றி செப்டம்பர் 18 உயிரிழந்தார்.
அவரின் இறுதி முகத்தை காண சிவகார்த்திகேயன் முதல் தனுஷ் வரை பல நடிகர்கள் வந்தனர். இந்நிலையில் நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார் ரோபோ சங்கரின் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசினார்.
அந்த விஷயம்!
அதில், " பத்து நாட்களுக்கு முன்பாக அவரை நேரில் பார்த்தேன். ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால் மீண்டும் மஞ்சள் காமாலை அறிகுறிகள் வந்ததாக சொன்னார்கள்.
அவரை அப்போது காப்பாற்றியது அவரது மனைவி தான். அந்த சமயத்தில் சங்கருக்கு உயிர் போய் உயிர் வந்தது. குழந்தை போல் மனைவி தான் பார்த்துக்கொண்டார்.
அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டபோது உடைந்து அழுது விட்டேன். அவரை நேரில் காண மனதில் தைரியம் இல்லை.
பிரியங்காவை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது. இனி ரோபோ இல்லாமல் அவர் எப்படி இருக்க போகிறார் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.