எத்தனை முறை கல்யாணம் பண்ணீங்க!! அதை சொல்ல முடியாது.. ரகசியம் உடைத்த நடிகை வனிதா..
சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார் விஜயகுமாரின் மகள் வனிதா. இப்படத்தினை தொடர்ந்து திருமணம் செய்து செட்டிலாகிய வனிதா, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். அதன்பின் வேறொருவரை இரண்டாம் திருமணம் செய்து இரு பெண் குழந்தைகளை பெற்று கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் பல பிரச்சனைகளை சமாளித்து வந்த வனிதா, பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் காத்து கருப்பு கலை எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பேசியுள்ளார் நடிகை வனிதா.
பேட்டியில் நடிகை வனிதாவிடம் எத்தனை முறை கல்யாணம் செய்தீர்கள், விவாகரத்துக்கு காரனம் என்ன? அடுத்த கல்யாணம் எப்போது என்ற கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு வனிதா, இருமுறை திருமண செய்து கொண்டேன், இல்லீகலா கல்யாணம் பண்ணிட்டே இருக்க வேண்டியது தான், அதற்கெல்லாம் உல்ல தூக்கி போடமாட்டாங்க. முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து செய்தேன், அதற்கான காரணம், என் தனிப்பட்ட விசயம் என்பதால் அதை வெளியில் சொல்ல முடியாது.

இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவாகரத்தா!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்...
20 ஆண்டுக்கு முன் நடந்த ஒன்றை பற்றி நான் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் தான் இரண்டாம் கல்யாணத்திலும் நடந்தது. மூன்றாவது கல்யாணம் இனிமேல் தான் பண்ணுவேன், திடீர்-ன்னு கூட பண்ணுவேன்.
யார் மேலையும் கிரஷ் இல்லை, வரவும் வராது, அந்த வயசை தாண்டிவிட்டேன் என்று வனிதா கூறியிருக்கிறார். நான் என்னையும் சினிமாவையும் காதலிக்கிறேன், என்னை பலர் காதலிக்கிறார்கள் என்றும் வனிதா ஓப்பனாக பேசியிருக்கிறார்.