ஜோவிகாவின் தந்தை யார்? தாத்தா பெயர் வைக்க காரணம் இதுதான்.. கண்கலங்கிய வனிதா

Vanitha Vijaykumar Actress Jovika Vijaykumar
By Bhavya May 27, 2025 06:30 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

திரையுலகில் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் சில பிரச்சனைகள் காரணமாக தனது தந்தையை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த பிக் பாஸ் சீசன் 7 வனிதா மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா தற்போது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை ஜோவிகாவின் அம்மா வனிதா இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஜோவிகாவின் தந்தை யார்? தாத்தா பெயர் வைக்க காரணம் இதுதான்.. கண்கலங்கிய வனிதா | Vanitha Open Up About Her Ex Husband

காரணம் இதுதான்

இந்நிலையில், தன் மகள் ஜோவிகா பிறந்த போது தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்தும் ஜோவிகாவின் அப்பா குறித்தும் சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டார் வனிதா.

அதில், " ஜோவிகா பிக்பாஸில் இருந்தபோது அவர் பெயருக்கு பின் அப்பா பெயர் இல்லாமல் ஏன் விஜயகுமார் என்ற பெயர் உள்ளது என்று பலர் கேட்டனர்.

ஜோவிகாவின் தந்தை யார்? தாத்தா பெயர் வைக்க காரணம் இதுதான்.. கண்கலங்கிய வனிதா | Vanitha Open Up About Her Ex Husband

ஜோவிகா என் வயிற்றில் இருக்கும்போது நான் இங்க இருக்க முடியாத சூழல் வந்தது. என்னைப்பற்றி தப்பா பேசி என் குழந்தைகளின் தந்தை பிரச்சனை செய்தார்.

நான் நிம்மதியா குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக என் அப்பா என்னை அமெரிக்கா அனுப்பி வைத்தார். அங்கு குழந்தை பிறந்த உடன் பெயர் வைக்க வேண்டும். அப்போது, நான் ஜோவிகாவின் தந்தை பெயரை வைக்க விரும்பவில்லை. அதனால், என் தந்தை பெயரை வைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.