ராபர்ட் விவாகரத்து செய்யவில்லை..அதுதான் பிரேக்கப் செய்ய காரணம்!! வனிதா சொன்ன உண்மை..
வனிதா
சந்திரலேகா திரைப்படம் மூலம் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த வனிதா விஜயகுமார், தனிப்பட்ட வாழ்க்கையி ஏற்பட்ட பல விஷயங்களுக்கு பின் மீண்டும் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனிதா, தானே இயக்கி நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் உருவாக்கியுள்ளார்.
ராபர்ட் மாஸ்டர் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை வனிதா மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
சிம்பு - நயன்தாரா
சமீபத்திய பேட்டியில், பிரேக்கப்பிற்கு பின் ராபர்ட்டுடன், அதுவும் கணவன் - மனைவியாக ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதாரணமில்லை. மறந்துவிட்டோம், பிரிந்துவிட்டோம், அவருக்கு வேறு வாழ்க்கை இருக்கு, எனக்கும் வேறு வாழ்க்கை இருக்கு என்று தெரிந்தாலும், மனதில் சின்னசின்ன விஷயங்களுக்கு பொசஸிவ் மற்றும் கோபம் வரத்தான் செய்யும்.
பிரேக்கப் செய்து பிரிந்தப்பின் சிம்பு - நயன்தாரா இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதன்பின் ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்துள்ளோம். பல நேரத்தில் இருவருக்கும் சண்டைவரும், ஆனால் அடுத்தநாள் காலை சரியாகிவிடுவோம். எங்களுடன் வேலை பார்த்த நடிகர்கள் தான் மண்டையை உடைத்துக்கொள்வார்கள்.
ராபர்ட் மாஸ்டருடன் ரிலேஷன்ஷிப்
ராபர்ட் மாஸ்டருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால் அந்தநேரம் அது அமையாமல் போய்விட்டது. ஏனென்றால் அவருக்கு அந்நேரத்தில் விவாகரத்தாகவில்லை. இதனால் திருமணம் நடக்காமல் போய்விட்டது.
ஆனால் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். இப்படத்தில் இருவரும் நடித்த போது பல இடங்களில் கண்கலங்கினோம். தாலிக்கட்டும் சீனில் ராபர்ட் உண்மையில் எமோஷனலாகிவிட்டார். அந்த சீனுக்காக 40 முறைக்கு பின் தான் டேக் ஓகே ஆனந்து என்று வனிதா தெரிவித்துள்ளார்.