கொரோனா தேவியா? வனிதா தேவியா? வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான வனிதா விஜயகுமார்

vanitha vijayakumar coronavirus coronadevi
By Edward May 22, 2021 10:30 AM GMT
Report

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை கொடுத்து வருகிறது. இந்தியாவில் முதல் அலையைவிட இரண்டாம் அலை உயிரிழப்பை அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்த விழிப்புணர்வுகளும், மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் கோவையில் கொரோனா தேவி என்று கோவில்கட்டியும் அதற்கான சிலையை வைத்தும் அபிஷேகம் செய்து வருகிறார்கள் சிலர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி விமர்சனங்களை தெரிவித்தும் வந்தனர்.

மூட நம்பிக்கை என்று முட்டாள் தனமான செயலில் ஈடுபடுவது வருத்ததை கொடுத்தும் வருகிறது. இந்நிலையில், இதை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். அந்த கோவிலில் இருந்த கொரோனா தேவியின் சிலை பார்ப்பதற்கு வனிதா விஜயகுமாரின் முகத்தை போல் இருப்பதாக மீம்ஸ்கள் வெளியாகியுள்ளது.

இதை வனிதாவிற்கு டேக் செய்து வருவதால். புகைப்படத்தை கண்ட வனிதா விஜயகுமார் அடக்கடவுளே.. என்னது இது.. இதை ஏன் எல்லாரும் எனக்கு ஷேர் பண்றீங்க என்று கூறியுள்ளார் வனிதா. சிலர் என்னடா கொரோனா தேவிக்கு சிலை வைக்கிறேன்னு வனிதாவுக்கு சிலை வச்சிருக்கீங்க என்று ஷாக்காகியும் வருகிறார்கள்.

GalleryGallery