நான் கூட பப்லு மாதிரி பண்ணலாம், வயசு தாண்டி ஒரு ஈர்ப்பு இருக்கு.. வெளிப்படையாக பேசிய வனிதா
நடிகர் பப்லு பிரித்விராஜ், ஷீத்தல் என்ற 24 வயதான பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்ததை சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். ஆனால் 7 மாதத்தில் இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு பப்லு, நான் பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேச விரும்பவில்லை என்று பதில் அளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய வனிதா, 27 வயதில் மகன் இருக்கும் போது 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா? என்ற கேள்வி தேவையற்றது.
பப்லு பிரித்திராஜ் தனது மகனை ரோட்ல விட்டுவிடவில்லை.
பப்லு பிரித்திராஜ் ஒரு அப்பாவாக தன்னுடைய கடமையை செய்தார். வயது வித்தியாசத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்தது. வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. நானும் பப்லு பிரித்திராஜ் மாதிரி பண்ணலாம் அது தனிப்பட்ட விஷயம் என்று வனிதா பப்லு பிரித்திராஜ்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.