வனிதா விஜயகுமாரின் 4வது திருமணம்.. யாருடன் தெரியுமா! ஓபனாக கூறிய நடிகை
நடிகை வனிதா விஜயகுமார் முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின் ராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்கவில்லை, அவரிடமும் விவாகரத்து பெற்றார்.
பின் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வனிதாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது என கிசு கிசுக்கப்பட்டது. கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் சில நாட்களே நீடித்தது. இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தன்னுடைய நான்காவது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். இதில் ரசிகர் ஒருவர் நான்காவது திருமணம் குறித்து வணிதாவிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு 'எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஹார்டின் எமோஜியுடன் பதில் கூறியிருந்தார்.
இதனால் நான்காவது திருமணம் செய்ய போகிறாரா வனிதா விஜயகுமார் என கேள்வி எழுந்தது. இப்படியொரு சூழ்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்ளின் கேள்விக்கு பதிலளித்து வந்த வணிதாவிடம் ரசிகர் ஒருவர், எப்போது 4வது திருமணம்? எங்களையும் கூப்பிடுங்க என கேட்டார்.
இதற்கு வனிதா 'போஸ்டர் அடித்து நியூஸ் கொடுப்பேன். தமிழ்நாட்டையே அழைப்பேன்' என கூறியுள்ளார். 4வது திருமணம் குறித்து வனிதா பேசியுள்ள விஷயம் தற்போது ரசிகர்களுக்கு இடையே வைரலாகி வருகிறது.
You May Like This Video