உனக்கு கல்யாணம் தேவையா..உடலுறவுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்!! வனிதா விஜயகுமார் பதிலடி..

Vanitha Vijaykumar Marriage Tamil Actress Actress
By Edward Apr 13, 2025 09:30 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் விஜயகுமார் மகள் வனிதா. இதனை தொடர்ந்து பல சிக்கல்களில் சிக்கிய வனிதா தன்னுடைய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

உனக்கு கல்யாணம் தேவையா..உடலுறவுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்!! வனிதா விஜயகுமார் பதிலடி.. | Vanitha Vijayakumar About Marriage Relationship

உடலுறவுக்கும் கல்யாணத்துக்கும்

அதில், ராபர் மாஸ்டருடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் போஸ்டரை பார்த்து பலர், வனிதாவுக்கு கல்யாணம் என்றும் இந்த வயசுல வனிதாவுக்கு கல்யாணம் தேவையா என்று கமெண்ட் செய்தார்கள். வயதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அதேபோல் உடலுறவு வைத்துக்கொள்வதற்கும் கல்யாணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. இதைக் கேட்கும் போது இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? இல்லையா? அவர்கள் எல்லாம் எந்தக்காலத்தில் இருக்கிறார்கள்.

திருமணம் என்பது தனக்கான ஒரு பார்ட்னரை தேர்வு செய்வதுதான். ஆனால் பிசிக்கல் ரிலேஷன்ஷிப் என்பது யாரிடம் வேணாலும் வைத்துக்கொள்ளலாம். அந்த அறிவு கூட இல்லாமல் இவர்கள் பேசுகிறார்கள். நிச்சயமாக பெண்களுக்கு ஒரு ஆண் தேவை, எப்போதுமே நம் குழைந்தகள் நம்மை பாதுகாத்துக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

உனக்கு கல்யாணம் தேவையா..உடலுறவுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்!! வனிதா விஜயகுமார் பதிலடி.. | Vanitha Vijayakumar About Marriage Relationship

அப்படி அவர்கள் நம்மை கவனித்துக் கொண்டே இருந்தாலும் அதுவே அவர்களுடைய வாழ்க்கையை கெடுப்பது போல் ஆகிவிடும். இதனால் நமக்கான பார்ட்னர் இருப்பது மிகவும் நல்லது. சரியான நேரத்தில் நம்மை புரிந்து கொண்டவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

நான் அப்பா, அம்மா, வீடில் தொல்லை செய்கிறார்கள், கல்யாணமாகி வேறவீட்டில் நன்றாக இருக்கலாம் நினைத்து, 20 வயதில் திருமணம் செய்துகொண்டு வீணாப்போனேன். அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிவதால் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான் என்று வனிதா விஜயகுமார் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.