அசிங்கமா போய்டும்..இளையராஜா வேண்டுமென்றே தான் கேஸ் போட்டு இருக்காரு!! வனிதா..
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் சமீபத்தில் ரிலீஸானது. படத்தின் பயன்படுத்திய ராத்திரி சிவராத்திரி பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா வழக்கு பதிவு செய்தார்.
ஆனால் நாங்கள் இளையாராஜாவை சந்தித்து அனுமதி வாங்கியும் ஆசிவாதம் பெற்றும் தான் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினோம் என்றும் இளையராஜா வீட்டு மருமகளாக போகவேண்டியவள் நான் என்றும் வனிதா கூறியிருந்தார். இதுதொடர்பாக வனிதா பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளையராஜா
இந்நிலையில் கடும்கோபத்தில் இருந்த வனிதா, பத்திரிக்கையாளர்களிடம் இப்பிரச்சனை குறித்து மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் வேணும்னே என் மேல் கேஸ் போட்டு இருக்கிறார்.
ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சனை இருக்கும், இந்த பாடல் உரிமை சோனி மியூசிக்கிடம் இருந்தாலும் இதை உருவாக்குவதற்கான அனுமதி கொடுத்தது என் சொந்த பெரியப்பா தான். அந்த குடும்ப பிரச்சனையை வைத்துதான் இப்போது கேஸ் போட்டிருக்கிறார்.
நான் அவர் வீட்டு மருமகளாக போகவேண்டியவள் என்று முன்பே கூறியிருந்தேன். அதோடு அவங்க குடும்பத்தை சேர்ந்த பையன் என்னிடம் நீ என்னை லவ் பண்றியா? இல்லை என் அப்பாவை லவ் பண்றியான்னு கேட்டான். அப்பக்கூட உங்க அப்பாவ தான் லவ் பண்றேன்னு சொன்னேன். அந்தளவிற்கு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் என் மீது வழக்கு போட்டிருக்கிறர.
நான் இந்த வீட்டில் ஒரு பொண்ணூ போலத்தான் இருந்தேன். பவதாரணயும் நானும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். என்னை பார்க்கும்போதெல்லாம் பவதாரணி நமக்குள், விட்ட குறை தொட்ட குறை இருக்குதுன்னு சொல்லுவாள். இப்போ என் மேல கேஸ் போட்டிருக்காருன்னா அவரோட சொந்த பொண்ணூ பவதாரணிக்கும் இதே நிலைமை தானா? நான் இதற்கு மேல் பேசினா பல விஷயத்தை சொல்லிவிடுவேன், அசிங்கமா போய்விடும் என்று வனிதா கோபத்துடன் பதிலளித்துள்ளார்.