விஜய் திரிஷா விவகாரம்.. எல்லோரின் கதையும் எனக்கு தெரியும்!! வனிதா விஜயகுமார் ஓபன் டாக்..
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த வழக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் வேண்டுகோளின்படி வழக்கை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்துவைத்தார்.
விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

விஜய் திரிஷா விவகாரம்
இந்நிலையில், நடிகை வனிதா கொடுத்த பேட்டியொன்றில் விஜய் - சங்கீதா குறித்து பேசியிருக்கிறார்.
அதில், விஜய்யை எனக்கு நன்றாகவே தெரியும். அவரும் நானும் ஒரு படத்தில் நடித்திருக்கும்போது உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் வாங்கிய சம்பளத்தைவிடவும் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் குறைவு. அதனை இப்போதுதான் வெளியே சொல்கிறேன்.
அதேபோல் அந்த சமயத்தில் எனக்கு ஃப்ளைட்டில் டிக்கெட் போடுவார்கள். விஜய்க்கு ட்ரெய்னில் டிக்கெட் போடுவார்கள். அப்போதே கஷ்டம் என்றால் என்னவென விஜய்க்கு தெரியும் என்று எஸ் ஏ சந்திரசேகர் சொல்வார்.

திரிஷாவின் கதை
திரிஷாவை பொறுத்தவரை அவர் எல்லோருக்கும் நல்ல ஃபிரெண்ட். அவரது சர்க்கிள் வேறு, என்னுடைய சர்க்கிள் வேறுதான். இருந்தாலும் நல்ல பழக்கம். சினிமாவை தாண்டி நிறைய பழகியிருக்கோம்.
நான் ஃபோன் செய்யும்போது அவர் தியேட்டரில் இருந்தால், ஃபோனை கட் செய்துவிட்டு, நான் இப்போது தியேட்டரில் இருக்கிறேன், முடித்துவிட்டு அழைக்கட்டுமா? இப்போது எதுவும் அவசரமா? என்று கேட்பார். அவ்வளவு நல்லவர் திரிஷா. எல்லோரும் திரிஷாவின் கதையை பேசுகிறார்கள், எல்லோரின் கதையும் எனக்கு தெரியும் என்று வனிதா பகிர்ந்துள்ளார்.