மாடர்ன் டிரெஸ்..காட்டிதான் வாய்ப்பு வாங்கனும்ற அவசியம் எனக்கு இல்லை!! அதிரடி பதிலளித்த வனிதா..
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளாக விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன்பின், சில பிரச்சனைகளை சந்தித்து வந்த வனிதா, பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது, தானே நடித்து இயக்கியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். அவரின் மகள் ஜோவிகா தயாரித்துள்ள இப்படம் ஜூலை 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
மாடர்ன் டிரெஸ்
சமீபத்திய பேட்டியொன்றில், சினிமாத்துறையோ இல்லை கார்ப்பரேட்டோ, மாடர்ன் டிரெஸ் போட்டிருக்கும் பெண்கள் டேட்டிங் செல்வார்கள், தவறானவர்கள் என்று நினைக்கக்கூடாது.
நான் மாடர்ன் டிரெஸ் தான் அதிகம் போடுவேன், அதுதான் எனக்கு வசதியாக இருக்கும். காட்டிதான் வாய்ப்பு வாங்க வேண்டுமென்றே அவசியம் எனக்கு இல்லை. ஒருகாலத்ஹ்டில் அந்த மைண்ட் செட் இருந்தது, நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்களா? என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள்.
நான் கடந்த 5 ஆண்டுகளாக எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. ஏனென்றால் நான் டைம் பாஸுக்கு லவ் செய்யவில்லை, திருமணம் என்பது கமிட்மெண்ட், அதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், அது நடக்காதபோத் எதற்காக ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்று வனிதா தெரிவித்துள்ளார்.