வனிதாவை அசிங்கப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி! கோபத்தில் விலக இதுதான் காரணம்!

biggboss television bbjodigal vanithavijayakumar vijaytelevision
By Edward Jul 03, 2021 05:36 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை வனிதா. விஜய்யுடன் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர். இடையில் திருமணம், விவாகரத்து, காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை என பல்வேறு சங்கடங்களை சந்தித்து தன் இரு மகள்களை வளர்ந்து வருகிறார் வனிதா.

சமீபத்தில் மூன்றாம் திருமணம் செய்தும் குடிகாரர் என்பதால் பிரிந்துவிட்டார். அதன்பின், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ், குக்வித்கோமாளி, கேபிஒய் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல்ல இடத்தினை பெற்று வருகிறார்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி தாத்தாவுடன் ஜோடி போட்டு நடனமாடி வந்தார். கடந்த வார நிகழ்ச்சியில் கூட ஆடிய வனிதா இந்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று திடீர் முடிவினை எடுத்துள்ளாராம்.

விஜய் தொலைக்காட்சி மீதுள்ள தொடர்பு தொடரும் என்றும் பிக்பாஸ் ஜோடிகள் குழு தன்னை அசிங்கப்படுத்தியும் பேசியும் வருவதால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிடுகிறேன் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடன் ஜோடி சேர்ந்து ஆடைய சுரேஷ் சக்ரவர்த்தியின் மன்னிப்பும் கேட்டுள்ளார்.