கதை பிடிக்காததால் படையப்பா படத்தை நிராகரித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா
Rajinikanth
Vanitha Vijaykumar
By Kathick
கே.எஸ். ரவிகுமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி பிளாக்பஸ்டர் ஆன திரைப்படங்களில் ஒன்று படையப்பா.
இப்படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், சௌந்தர்யா என பலரும் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினியின் மூத்த மகளாக நடித்திருந்தவர் நடிகை ப்ரிதா ஹரி. ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை வனிதா தானாம்.
இதுகுறித்து அவரே பேட்டியில் கூறியுள்ளார், "படையப்பா திரைப்படத்தில் முதன் முதலில் ரஜினியின் மகளாக நடிக்க இருந்தது நான் தான். நான் நடிக்க மறுத்துவிட்டேன். அதன்பின் என் தங்கை பிரித்தாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, அவ நடிச்சிருந்தா. கதை கேட்டப்போ சுத்தமா எனக்கு பிடிக்கவில்லை. ஹீரோயின் ரோலுக்கு கூப்பிட்டு இருந்தா ஒருவேளை நடித்திருப்பேன்" என கூறியுள்ளார்.
