கட்டாயப்படுத்தி அது போன்ற காட்சிகள்.. நடிகை வரலட்சுமி உடைத்த ரகசியம்
நடிகை வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சரத்குமார், தமிழ் திரையுலகில் முக்கிய நாயகிகளில் ஒருவராக இருப்பவர். போடா போடி படம் மூலம் நடிக்க தொடங்கி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் உள்ளார்.
எல்லா நடிகைகளையும் தாண்டி இவரிடம் ஸ்பெஷல் என்றால் அது வேகமாக டயலாக் பேசும் திறமை தான். சில தினங்களுக்கு முன் இவர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் ஆகியோர் நடிப்பில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனில் வரலட்சுமி பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உடைத்த ரகசியம்
அதில், " எந்தப் படத்தில் தான் கிளாமர் இல்லை. எந்த ஹீரோயினையும் கட்டாயப்படுத்தி அது போன்ற காட்சிகளில் நடிக்க சொல்வதில்லை. அவர்களுக்கு விருப்பம் இருப்பதால் தான் நடிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.