பொண்ணு மாதிரி நடந்து வா!! வரலட்சுமியை வெளுத்து வாங்கிய இயக்குனர்.. இது வேறயா
வரலட்சுமி சரத்குமார்
நடிகை வரலட்சுமி சரத்குமார் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அடுத்தடுத்து வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இது வேறயா
இந்நிலையில், மதகஜராஜா படத்தில் நடித்தது குறித்து வரலட்சுமி பகிர்ந்த விஷயம் வைரலாகி வருகிறது. அதில், " மதகஜராஜா படத்தில் நடிக்கும்போது சுந்தர் சாரிடம் இருந்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.
ஹீரோயின் இன்ட்ரோ சீன்னில் நான் நடந்து வந்ததை பார்த்து சுந்தர் சார் என்னிடம், பொண்ணு மாதிரி நடந்து வா. சும்மா தப தபனு நடந்து வர என்று திட்டுவார்.
இது போன்று சின்ன சின்ன விஷயங்களில் சுந்தர்.சி சார் என்னை மோல்ட் செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.