வரலட்சுமிக்கு விலை உயர்ந்த பரிசளித்த கணவர்.. குஷியில் நடிகை

S Varalakshmi Trending Videos Actress
By Bhavya Jul 23, 2025 06:30 AM GMT
Report

வரலட்சுமி சரத்குமார்

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது.

இப்போது வரலட்சுமி, விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் கமிட்டாகி இருக்கிறார். பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மும்பையை சேர்ந்து நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

வரலட்சுமிக்கு விலை உயர்ந்த பரிசளித்த கணவர்.. குஷியில் நடிகை | Varalakshmi Husband Gifted A Expensive Car

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராகவும் வலம் வந்தார்.

விலை உயர்ந்த பரிசு

இந்நிலையில், நடிகை வரலட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு பிங்க் நிறத்திலான 'போர்ஷே' ரக காரை அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை வரலட்சுமி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.