காதல் நிக்கோலாய் ஆனால் என்னுடைய உயிர் அது தான்.. வரலட்சுமி திருமணத்திற்கு பின் இப்படி சொல்லிட்டாரே
பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தற்போது வரலட்சுமி தனது கணவருடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது வரலட்சுமி இடம், நீங்கள் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. "கல்யாணத்தின் போது உங்களை சந்திக்க முடியவில்லை. இப்போதுதான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய காதலர் நிக்கோலாய் சச்தேவ் தான், ஆனால் என்னுடைய உயிர் சினிமாவே என்பது அனைவருக்கும் தெரியும். நிறைய பேர் என்னை கல்யாணம் ஆன பிறகும் நடிப்பீர்களா என்று கேட்டனர்.
என் கணவர் பேசியதிலிருந்தே நீங்கள் அதற்கான பதிலை தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன். நீங்கள் எனக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து வருகிறீர்கள். எப்போதும் என்னைப் பற்றி நல்ல விதமாக பேசுகிறீர்கள். நான் எந்த படம் செய்தாலும், அதற்கு பாராட்டுகளை நீங்கள் கொடுத்து வருகிறீர்கள். இது தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன் என்று வரலட்சுமி கூறியுள்ளார்.