நான் 2-ஆம் தாரமா!! கோபத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமி பதிலடி..

Varalaxmi Sarathkumar
By Yathrika Apr 08, 2024 05:00 PM GMT
Report

வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. படத்தில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்திவிடுவார். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தொழில் அதிபரான நிக்கேலாய் பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இந்த ஜோடி விவாகரத்து செய்துவிட்டனர்.

நான் 2-ஆம் தாரமா!! கோபத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமி பதிலடி.. | Varalaxmi Sarathkumar Kids Celebration Photo

அவரின் மகள் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, வரலட்சுமி மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்பவும் கவலைப்படமாட்டேன் என்றும் இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் உங்களுக்காக வாழுங்கள். நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் பயணிக்க மாட்டார்கள் எனவும் நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு துணையாக நிற்கப்போகிறீர்கள். அதனால் என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யுங்கள் என்று அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். 


Gallery