ஒருவழியாக மகள் வரலட்சுமி திருமணத்தை முடித்த சரத்குமார்!! வெளியான புகைப்படங்கள்..
நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் நடைபெற்றது.
நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகளுக்கு அப்பாவாக இருப்பவர் என்றும் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும் வரலட்சுமி இரண்டாம் தாராமாகப் போகிறார் என்று பலர் விமர்சித்து வந்தனர்.
இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலையை பார்த்து வந்தார் வரலட்சுமி. சில நாட்களுக்கு முன் வரலட்சுமி திருமணத்திற்கான மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
தற்போது வரலட்சுமி - நிக்கோலாய் இருவரும் தாய்லாந்தில் திருமணம் செய்துள்ளனர். திருமணத்தில் வெள்ளை கவுன் மற்றும் சேலையில் மின்னிய வரலட்சுமியின் புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.