அம்மாவாக இருக்கிறேன்...நன்றாக பார்த்துக்கொள்கிறேன்!! நடிகை வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்..
வரலட்சுமி சரத்குமார்
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது. பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மும்பையை சேர்ந்து நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து, பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராகவும் வலம் வந்தார். தற்போது, சரஸ்வதி என்ற படத்தினை இயக்கியுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துவிட்டது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்தார் வரலட்சுமி.

தாயாக இருக்கிறேன்
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தாய்மை என்பது பெரிய விஷயம் தான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றால் தான் தாய் என்பது இல்லை. எனக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை.
ஒருவேளை அந்த முடிவு எதிர்காலத்தில் மாறலாம். நான் என் தங்கைக்கும் என் நாய்க்கும் தாயாக இருக்கிறேன். என்னை சுற்றி உள்ளவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்.
அதுதான் என்னை பொறுத்தவரை தாய்ம். ஒரு பெண் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுப்பதே பேரண்ட்டிங்கில் சிறந்த முடிவு தான் என்று வரலட்சுமி ஓபனாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.