திருமணத்திற்கு பின் வரலட்சுமி சரத்குமார் எடுத்த முடிவு!! என்ன தெரியுமா?

Varalaxmi Sarathkumar Zee Tamil Tamil TV Shows Tamil Actress
By Edward Feb 15, 2025 03:45 PM GMT
Report

வரலட்சுமி

போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார் சரத்குமார் மகள் வரலட்சுமி. இப்படத்தினை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி ஒருக்கட்டத்தில் வில்லி ரொலில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் விஷாலுடன் நடித்த மதகதராஜா படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. படங்களில் நடித்துக்கொண்டே தற்போது புது முடிவினை எடுத்துள்ளாராம்.

திருமணத்திற்கு பின் வரலட்சுமி சரத்குமார் எடுத்த முடிவு!! என்ன தெரியுமா? | Varalaxmi Sarathkumar To Judge Dance Jodi Dance

ரியாலிட்டி ஷோ

40 வயதை தாண்டி ஒருசில நடிகைகள் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார்கள். அந்தவகையில், கடந்த ஆண்டு திருமணத்தை முடித்த கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்தார் வரலட்சுமி.

இந்நிலையில் பிரபல ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றி முடிவெடுத்துள்ளாராம். பாபா மாஸ்டர், சினேகா, சங்கீதா ஆகியோர் நடுவராக பணியாற்றி வந்த நிலையில் சங்கீதா நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வரலட்சுமி சரத்குமாரை நடுவராக அறிமுகம் செய்யவுள்ளது ஜீ தொலைக்காட்சி.