அஜித் படத்தில் ஒரே நாளில் நடித்து தெறித்து ஓடிய வாரிசு நடிகை!! உண்மை இதுதான்..
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் அவர் நடிப்பில் துணிவு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதேபோல் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் மிகப்பெரியளவில் வெற்றியும் பெற்று வருகிறது. இப்படத்தில், நடிகர் விஜய்க்கு அம்மாவா நடிகை ஜெயசுதா நடித்திருப்பார். சிறப்பாக நடித்த ஜெயசுதா சமீபத்தில் பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் வலிமை படம் எச் வினோத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அப்படத்தில் நடிகர் அஜித்திற்க்கு அம்மாவாக நடிகை சுமித்ரா நடித்திருப்பார்.
முதலில் நடிகை சுமித்ராவுக்கு பதில், அஜித் அம்மாவாக நான் நடிக்க வேண்டியது என்றும் ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
அப்படி நடித்தபோது கொரானா பாதிப்பால் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் வைரஸ் பாதிப்பின் பயம் காரணமாக அப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விலகிவிட்டதாக” நடிகை ஜெயசுதா கூறியுள்ளார்.