சீரியல் சீரியல்-ன்னு சொல்லியே இத்தனை கொடியை அள்ளிய வாரிசு... படுமோசமான கலாய்த்த துணிவு டீம்

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Dhiviyarajan Jan 18, 2023 07:24 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய், அஜித். வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் 11 -ம் தேதி மிகுந்த கொண்டாட்டங்களுடன் வெளியானது.

அதே தினத்தில் தான் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படமும் இந்த ஆண்டின் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்தது.

மேலும் இந்த இரண்டு படங்களுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

பொங்கல் ரியல் வின்னர்

தற்போது வரை துணிவு திரைப்படம் பல இடங்களில் வாரிசு படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது என கூறப்பட்டது. ஆனால் துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் உலகமெங்கும் 210 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் விஜய்யின் ரசிகர்கள் 'பொங்கல் ரியல் வின்னர் வாரிசு திரைப்படம் தான்' என்று ட்வீட் செய்து வருகின்றனர். 

ஆனால் இது வெறும் வடை சுடும் கதையாக இருக்கிறது என்று கூறும் வகையில் துணிவு படத்தினர் வாரிசு படத்தில் 210 கோடி வசூலை படுமோசமான கலாய்த்து மீம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.