சிம்பு படத்தின் பாடலை அட்டர் காப்பி அடித்த தமன்.. விஜய்யின் வாரிசு படத்துக்கு வந்த சோதனை..

Vijay Thaman Varisu
By Edward Nov 04, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். எஸ் தமன் இசையில் தில் ராஜு தயாரிப்பில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

வீடியோக்கள் லீக்

படம் ஆரம்பிக்கப்பட்டு ஷூட்டிங் சென்றது முதல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வீடியோக்கள் லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பாடலின் 30 நிமிட வீடியோவும் மருத்துவமனை காட்சியும் லீக்காகி விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என்று நேற்று பிரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற வரிகளில் விஜய் இப்பாடலை பாடியிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் நெட்டிசன்கள் எதாவது ஒரு குறையை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

ஒஸ்தி

அந்தவகையில் விஜய்யின் நடனத்தை ட்ரோல் செய்து வந்த நெட்டிசன்கள் இப்படத்தின் இசையையும் விட்டுவைக்கவில்லை. ஏற்கனவே சிம்பு நடித்து ஒஸ்தி படத்தில் எஸ் தமன் அமைத்திருந்த ஒரு பாடலான வாடி வாடி என்ற பாடலின் இசையை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். ஏற்கனவே, பிரின்ஸ் படத்தின் இசையை அப்படியே காப்பி அடித்ததாக தமனை ட்ரோல் செய்து வந்த நிலையில் விஜய்யின் வாரிசு படத்தையும் கலாய்த்து வருகிறார்கள்.