தீ விபத்தில் சிக்கிய நக்மா, ஓடிய பிரபுதேவா.. மறுவாழ்வு கொடுத்து காப்பாற்றிய இயக்குனர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வருபவர் வசந்தபாலன். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ஆல்பம் படத்தின் மூலம் இயக்குனராகினார்.
அதன்பின் வெயில், அங்காடி தெரு போன்ற படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். சமீபத்தில் ஜெயில் படத்தினை இயக்கி தோல்வியை கண்டார். தற்போது அநீதி என்ற படத்தினை எடுத்திருந்த வசந்தபாலன், சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார்.
அப்போது காதலன் படத்தின் போது ஷூட்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்தில் நடிகை நக்மா மாட்டிக்கொண்டார்.
பிரபுதேவா ஓடிவிட்டார். நான் உதவி இயக்குனராக இருந்ததால் நடிகை நக்மாவை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றினேன் என்று கூறியிருந்தார்.
பின் எங்களுக்கு தனியாக ஆடையை பரிசாக கொடுப்பார் என்று கூறியுள்ளார் வசந்தபாலன்.