நான் அறிந்ததுபோல் நடிகர் அஜித் அப்படி கிடையாது! சிட்டிசன் பட நடிகை வசுந்தரா தாஸ்..

citizen ajithkumar thalaajith vasundharadas heyram
By Edward Jun 16, 2021 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். அந்தவகையில் இந்தி நடிகையாக சினிமாத்துறையில் ஆரம்பித்தவர் நடிகை வசுந்தரா தாஸ். ஹே ராம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த பின் சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் இணையம் ஒன்றிற்கு பேட்டியளித்து சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் இசைத்துறையில் ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்தேன். ஏ. ஆர் ரகுமானை சந்திக்க வரும் பொழுதுதான் சில இயக்குனர்கள் என்னை பார்த்து நடிக்க வருமாறு அழைத்தனர். அப்போதுதான் ஹேராம் படத்தில் நடிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் இல் இருந்து அழைப்பு வந்தது.

என் பெற்றோர் முதலில் தயங்கினாலும் பின் நல்ல வாய்ப்பு என சம்மதித்தனர். எனக்கு ஸ்கிரீன் டெஸ்ட் நடந்தது. பின் உடனே தேர்வாகினேன் என்று கூறினார். மேலும் கமலுடன் நடித்தது ஒரு புத்தகம் அளவிற்கு கற்றுக்கொண்ட அனுபவம் என்றும் தல அஜித்தை பற்றி, அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தேன். பயிற்சி இல்லாமல் நேரடியாக இந்த படத்தில் நடித்தேன்.

அஜித்திடம் நல்ல நட்பாக பழக முடிந்தது. வேலையில் எப்போதும் கவனமாகவும் நம்மிடம் நல்ல நட்போடும், பணிவோடும் இருப்பார். அவரைப் பற்றி வெளியே நிறைய கேள்விபட்டிருப்போம். ஆனால் அவர் அப்படியில்லை. நேரடியாக பழகுவதற்கு மிகவும் நல்ல மனிதராக இருந்தார் என்று கூறியுள்ளார் நடிகை வசுந்தரா தாஸ்.