நடிகைகளின் ஆடைகளை வைத்து அதை செய்கிறார்கள்.. வேதிகா ஆவேசம்!
வேதிகா
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் மதராஸி படத்தின் மூலம் திரையில் தோன்றினார்.
இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தமிழ், மலையாளம் ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
ஆவேசம்!
இந்நிலையில், தற்போது வேதிகா ஆடை குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " பொதுவாக நடிகை என்றாலே எளிதில் விமர்சித்து விடுகிறார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்தாலே போதும், தவறாக பேச தொடங்கி விடுகின்றனர்.
உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு மாறவேண்டும். நான் கூட அவ்வப்போது பிகினி அணிகிறேன். அதனால் பல விமர்சனங்களுக்கு தள்ள படுகிறேன்.
ஆனால், அதற்கு நான் கவலைப்படவில்லை. நான் யார் என்று எனக்கு தெரியும். தவறாக இருப்பவர்கள் மாறினால் நல்லது" என்று தெரிவித்துள்ளார்.