நடிகை ஊர்வசி கர்ப்பம்! ஆர்ஜே வீட்ல விசேஷம்! படமே சர்ச்சையா இருக்கே..
ரேடியோ ஜாக்கியாக பிரபல வானொலியில் அர்ஜேவாக பணியாற்றி வந்தவர் ஆர்ஜே பாலாஜி. இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியப்பின் கிரிக்கெட் சம்பந்தமான தொலைக்காட்சி சேனலில் கமெண்ட்டேட்டராக பணியாற்றி வந்தார்.
நாணும் ரவுடி தான், வடகறி உள்ளிட்ட சில படங்களில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன், எல் கே ஜி போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றார்.
இதைதொடர்ந்து தயாரிப்பாளர் போனிகபூ தயாரிப்பில் பதாய் கோ என்ற பாலிவுட் படத்தினை ரீமேக் செய்யவுள்ளாராம். கோவையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் பர்ஸ்ல்லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வீட்ல விசேஷம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஊர்வசி கர்ப்பமாக இருக்க அவருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடப்பது போல் அந்த புகைப்படம் காணப்படுகிறது. பர்ஸ்ட்லுக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.