அந்தமாதிரி நடிச்சா தேசிய விருது.. வாய்ப்பு கேட்க 300 பெண்களை சீரழித்த போலி இயக்குனர்

Gossip Today
By Edward Sep 06, 2022 12:10 PM GMT
Report

சினிமாத்துறையில் வாய்ப்புக்காக வரும் பெண்கள், நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் கிடைக்கும் என்று கூறும் செய்திகளை கேட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் இயக்குனர் என்று கூறி வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடன் ஆசைவார்த்தை கூறியும் ஆபாசமாக கூறியும் ஏமாற்றியிருக்கிறார் ஒரு நபர்.

சேலத்தை சேர்ந்த சத்ரியன் என்பவர் நோ என்கிற ஒரு படத்தினை இயக்கவுள்ளதாக கூறி அறிவித்துள்ளார். இதையறித்து சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பல இளம்பெண்கள் வாய்ப்பு கேட்டு வந்துள்ளனர்.

அப்படி வரும் பெண்களிடம் நான் சொல்வதை போல் நடித்தால் தேசிய விருது கூட கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி க்ளாமராகவும் படுமோசமாகவும் நிற்க வைத்து போட்டோ வீடியோக்களை எடுத்துள்ளார். பின் அவர்களுடன் தனிமையில் இருந்ததை கூட வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.

சில பெண்களிடம் டிக்டாக் ரீல்ஸ் வீடியோவை எடுத்து பகிர்ந்தும் இருந்துள்ளார். சென்னை, பாண்டிச்சேரி, கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல ஊர்களில் சென்று பெண்களை ஏமாற்றி சீரழித்திருக்கிறார் சத்ரியன்.

இதில் கனகா என்ற பெண்ணை வேலைக்கமர்த்தி அவரிடமும் சில்மிஷம் செய்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அப்பெண் போலிசாரிடம் சென்று புகாரளித்துள்ளார். இதையறிந்து வேல்சத்ரியன் அலுவலகத்தில் ஆணுறை பாக்கெட்டுகள், ஹார்ட் டிஸ்குகள், லேப்டாப், பெண்டிரைவ் உள்ளிட்டவற்றை பரிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச காட்சி, விடியோக்கள் அதில் அடங்கியிருப்பதாகவும் அப்பெண்கள் யார் யார் என்பதையும் அறிந்து விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.