நானும் அவங்களும் ஒன்னா இருக்கிறத பாத்துட்டாங்க!. சில்க் ஸ்மிதா மறைவுக்கு பின் வெளிவந்த ரகசியம்
திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.
பிஸி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா 1996 -ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
பிரபல இயக்குனர், ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் தான் வேலு பிரபாகரன். இவரும் சில்க் ஸ்மிதாவும் காதலித்து வந்தார்களாம். ஆனால் இதற்கு முன்பே நடிகை ஜெயதேவியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ஒரு நாள் வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதா வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாராம். அந்த சமயத்தில் இவர்கள் ஒன்றாக இருப்பதை ஜெயதேவி பார்த்துவிட்டார்.
அப்போது ஜெயதேவி “உனக்கு நான் வேண்டுமா இல்லை அவள் வேண்டுமா” என கூறியிருக்கிறார். வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதாவை விட்டு ஜெயதேவி உடன் சென்று விட்டாராம். இதை பற்றி வேலு பிரபாகரனே கூறியுள்ளார்.