அந்த குற்ற உணர்வு எனக்கு இருக்கு!! சில்க் ஸ்மிதாவை வசியம் செய்த பிரபல இயக்குனர்
இந்திய சினிமாவில் கவர்ச்சி அரசியாக திகழ்ந்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகப்பெரிய உச்சத்தினை பிடித்த சில்க் ஸ்மிதா, கடந்த 1996ல் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
அவர் தற்கொலைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சில்க் ஸ்மிதா காதல் தோல்வியால் தான் அப்படியொரு முடிவெடுத்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பல இயக்குனர்களுடன் சில்க் ஸ்மிதா நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான வேலு பிரபாகரன், சித்ரா லட்சுமணன் அவர்களின் பேட்டியில் சில்க் ஸ்மிதா பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஜி எம் குமார் இயக்கத்தில் வேலு பிரபாகரன் ஒளிப்பதிவில் பிக் பாக்கெட் படம் சரத்குமார், ராதா, சில்க் ஸ்மிதா நடிப்பில் 1989ல் வெளியானது. அப்படத்தின் ஷூட்டுங் போது தான் சில்க் ஸ்மிதாவுக்கு உங்களுக்கு காதல் ஏற்பட்டதா, உங்கள் மீது காதல் வசப்பட்டாரா இல்லை சில்க் ஸ்மிதாவை காதல் வசப்பட வைத்தது நீங்களா என்று சித்ரா லட்சுமணன் கேட்டுள்ளார்.
அதற்கு வேலு பிரபாகரன், சொல்லலாம் அப்படி ஒரு குற்றவுணர்வு இருக்கிறது. முதல் தூண்டில் போடுறது நாம்தானே என்று கூறியிருக்கிறார். சில்க் ஸ்மிதா கார் பேனெட் மீது பல மணி நேரம் உங்களுக்காக காத்திருந்தாரா.
அதை வைத்து தான், டெத் பிக்சரில் அந்த காட்சிகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா ஒரு மிகப்பெரிய மனிதர், கணிவு கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார் வேலு பிரபாகரன்.