பாரதி கண்ணம்மா முடிவுக்கு வரும் ஆண்டு இதுதான்! உண்மையை உடைத்த வெண்பா..
தொலைக்காட்சி தொடர்களில் பெரியளவில் ஹிட்டாகி வருவது பிரபல தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல். முன்னனி சின்னத்திரை நடிகர் நடிகைகளும் வளர்ந்து வரும் பிரபலகளும் நடித்து வரும் இந்த சீரியலில் கண்ணாம்மா மீண்டும் எப்போது பாரதியுடன் சேர்வார் என்ற ஆவலுடன் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
ஆனால் இயக்குநர் கதையை வளைத்து வளைத்து கொண்டு செல்கிறாரே என்று ஆதங்கமாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். பாரதி கண்ணாம்மாவிற்கு வில்லியாக நடித்து கொண்டு வருபவர் வெண்பா என்கிற ஃபரீனா அசார்.
சமீபத்தில் சிறந்த வில்லி என்ற விஜய்டெலி விருதினையும் பெற்றார். இந்நிலையில் எப்போது சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் நேரலையில் பேசிய ஃபரீனாவிடன் ரசிகர் ஒருவர் பாரதி கண்ணாம்மாவின் க்ளைமேக்ஸ் காட்சி எப்போ என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஃபரினா அசார், 2051ல என்று கூறியுள்ளார்.