கர்ப்பமாக இருக்கும் போதே கேவலமாக திட்டிய ரசிகர்கள்! பதிலடி கொடுத்த வெண்பா..

serial television bharathikannamma venba farinaazad
By Edward Jul 29, 2021 03:44 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி தொடர் மூலம் பலர் பிரபலங்களாக கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அந்தவரிசையில் சின்னத்திரை வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் வெறுப்பை சம்பாதித்தாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பார்கள். அந்தவரிசையில் இருப்பவர் தான் பாரதி கண்ணாம்மா சீரியல் வில்லி வெண்பா என்கிற பரினா அசாத்.

பரினா ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு பெரிய அளவு வரவேற்பு வாங்கி கொடுத்தது பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்ததால் ரசிகர்கள் பலரும் இவர் மேல் கோபத்துடனே இருந்தனர். இந்நிலையில், கர்ப்பமாக இருப்பதை போட்டோஹூட் மூலம் அறிவித்ததை தொடர்ந்து சீரியலில் கர்ப்பமால கடைசி 2 மாதங்களில் நடிக்க போவதில்லை என்றும் அடுத்த வெண்பா நான் தான் என்றும் கூறி ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது, பரினா தன் வயிற்றில் மருதாணி வைத்து வரைந்த படி புகைப்படம் ஒன்றை எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி செய்யலாமா என ஒரு சில ரசிகர்கள் திட்டித் தீர்த்து உள்ளனர். மேலும் சில ரசிகர்கள் இவ்வளவு கேவலமாக புகைப்படத்தை எல்லாம் வெளியிடலாமா என கேட்டுள்ளார்.

இதற்கு பரினா உடலமைப்பும் பார்வையும் அசிங்கமாக பார்ப்பது நீங்கள்தான் என கடுமையாக கோபப்பட்டு அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படத்தோடு அசிங்கப்படுத்தியுள்ளார் பரினா.

கர்ப்பமாக இருக்கும் போதே கேவலமாக திட்டிய ரசிகர்கள்! பதிலடி கொடுத்த வெண்பா.. | Venba Angry With Fans Body Shaming For Pregnancy