போதையில் கர்ப்பை இழந்த வெண்பா.. கர்ப்பமானதை கேட்டு வெட்கப்பட்ட ரோஹித்

Bharathi Kannamma Serials Farina Azad
By Edward Sep 15, 2022 02:10 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஒரு கதையை அங்கும் இங்குமாக கதையை வளைத்து வளைத்து எடுத்து வருகிறார் சீரியல் இயக்குனர். தற்போது பீஸ்ட் படபாணியில் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜேக் செய்துவிடும் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

கொலைக்காரியான கண்ணம்மா

தீவிரவாதிகளில் ஒருவன் பிடியில் வைத்திருக்கும் பெண்களை சீரழித்து வந்த நிலையில் அதில் கண்ணம்மாவையும் வலையில் சிக்க வைத்துள்ளார். அதற்காக தனியாக அழைத்து செல்லப்பட்ட கண்ணம்மாவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளான். தன் கையில் வைத்திருந்த கத்தரியால் கழுத்தில் குத்தி கண்ணம்மா கொலை செய்து விடுகிறார். இது ஒரு பக்கம் செல்ல மற்றொரு பக்கம் வெண்பா கதையை காண்பிக்கிறார்கள்.

வெண்பா கர்ப்பம்

ரோஹித்துடன் நிச்சயமான நாளில் பாரதியாக நினைத்து படுக்கையை பகிர்ந்துள்ளார் வெண்பா. போதையில் ரோஹித்திடம் கர்ப்பை இழந்த வெண்பா, கர்ப்பமாகி வாந்தி எடுக்கிறார். இதனை அறிந்து வேலைக்காரி சாந்தி நாடி பார்த்து கர்ப்பமாகி இருப்பதை கூறி ஷாக் கொடுத்துள்ளார். இதனால் ஷாக்கான வெண்பா கத்த, அது கனவாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

போதையில் கர்ப்பை இழந்த வெண்பா.. கர்ப்பமானதை கேட்டு வெட்கப்பட்ட ரோஹித் | Venba Shocked For Pregnant News Bharathikannamma

ரோஹித் வெண்பாவிடம் சென்று கர்ப்பமாகி இருப்பதுபோல் கனவு கண்டதை அப்படி கூற வெண்பா ஷாக்காகி விடுகிறார். இதனால் கோபமான வெண்பா ரோஹித்தை துரத்திவிட்டு அழுகிறார். இதன்பின் வரும் எபிசோட்டில் மாறிமாறி காட்சிகளை வைத்து நாட்களை ஓட்டுகிறாரே என்றும் இயக்குனர் பீஸ்ட் சீரியலை முடிக்க மாட்டாரா என்று கூறி பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.