மனமதலீலையில் மாட்டிய வெங்கட் பிரவு! இந்த இயக்குனர் தான் எல்லாத்துக்கும் காரணமாம்?
தமிழ் சினிமாவில் காமெடி கலந்த கமர்சியல் படத்தினையை எடுப்பதில் இந்த கால இளைஞர்களுக்கு கொடுத்து வரும் இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. சென்னை28, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை கொடுத்து ஹிட்டாக்கிய வெங்கட் பிரபு தற்போது அடல்ட் காமெடி கலந்த படமான மன்மதலீலை-ஐ இயக்கியுள்ளார்.
அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக ரியா சுமன், சம்யுக்தாஹெக்டே, ஸ்மிருதி வெங்கட்ட் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக்கே சர்ச்சைக்கு முதல் படியாக அமைந்தது.
அதன்பின் டிரைலர் வெளியாகி சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாக கிளம்பியது. தகாத உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு லிப்லாக், பெட் சீன் என பட்டையை கிளப்பி இருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கு கடும் எதிர்ப்புகள் பலரிடம் வந்தாலும் ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் பாராட்டையும் கொடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா டிவிட்டர் பதிவில், வெங்கட் பிரபு லீலைகள் என்று கூறியுள்ளார். இதற்கு வெங்கட் பிரபு, இந்த சேட்டைக்கான் விதை நீங்கள் போட்டது லவ் யூ சார் என்று எஸ்ஜே சூர்யாவை மாட்டிவிட்டுள்ளார். இதற்கு எஸ்ஜே சூர்யா சிரிக்கும் ஸ்மைலியை பதிலாக போட்டுள்ளார்.
Ana indha settai kana vedhai neenga pottadhu!! Hehehe love u saar!!#new #anbeAruyirey https://t.co/lBRPOXCVY8
— venkat prabhu (@vp_offl) March 21, 2022