மூட நம்பிக்கையை பெருமையாக பேசி, வாங்கிக்கொண்ட குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட்

Cooku with Comali
By Tony Mar 14, 2024 03:30 AM GMT
Report

வெங்கடேஷ் பட்

வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி மூலம் உலகம் அறிந்த செப் ஆக மாறிவிட்டார்.அதற்கு முன்பே இவர் செம பேமஸ் என்றாலும் இந்த நிகழ்ச்சி அவரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சை ஆகியுள்ளது, அதோடு அது மிகவும் வைரல் ஆகி வருகின்றது.

அப்படி என்ன அந்த வீடியோவில் பேசினார் என்றால், தான் பிள்ளை பிறந்த போது திருப்பதி சென்று பெருமாளை பார்த்த பிறகே குழந்தையை பார்ப்பேன் என்று வேண்டியிருந்தாராம்.

ஆனால், குழந்தை பிறந்த 10 நாள் கோவில் போகக்கூடாது எங்கள் வழக்கப்படி, அதனால், 10 நாட்கள் என் குழந்தையை பார்க்கவில்லை என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து, இதெல்லாம் மூட நம்பிக்கையின் உச்சம், இதை பெருமையாக வேறு நீங்கள் பேசுகிறீர்கள் என கண்டித்து வருகின்றனர்.