சீரியல் நடிகர் வேணு அரவிந்திற்கு கோமா கிடையாது! வீடியோ வெளியிட்ட நடிகர்

serial radhika venuaravinth arunrajan vanirani
By Edward Jul 30, 2021 07:17 AM GMT
Report

சின்னத்திரையில் நடிகை ராதிகா நடித்து வெளியான சீரியல்களிலும் மற்ற சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் வேனு அரவிந்த். சமீபத்தில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தார். இதையடுத்து நிமோனியா வந்ததால் மூளையில் கட்டி இருந்ததால் அகற்றப்பட்டது. தற்போது அடுத்தடுத்து உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது. அதுபற்றி நடிகை ராதிகாவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் இதனை மறுத்துள்ளார்.

நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்றும் அவர் தற்போது நினைவுடன் தான் இருக்கிறார் என்றும், தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார் என்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். 

மேலும், சில நிமிடங்களுக்கு முன்னர் தான் வேணுவின் மனைவி ஷோபா அவர்களிடம் பேசியதாகவும், தற்போது அவர் மிகவும் நலமாக இருப்பதாகவும், கண்டிப்பாக முழு குணமாகி வீடு திரும்பி விடுவார் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.