வேட்டையன் படத்தில் இதுதான் இருக்கு!! பிரித்து மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்..
வேட்டையன்
நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் வெளிவந்தது. ரஜினியின் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் வேட்டையன் உறுதி. அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.
இது மாபெரும் வசூலாக இருந்தாலும், விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது குறைவு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேட்டையன் படம் எப்படி இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ஸ்டைலில் விமர்சித்து பேசியிருக்கிறார்.
கதைக்களம்
கன்னியாக்குமரியில் எஸ்.பியாக நம்ம தலைவரு. சமூக விரோதிகளை பார்த்தால் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தரும் பழக்கம் எல்லாம் இல்லை. அவர்களை பார்த்தாலே நாயை சுடுவதுபோல் என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுவதுதான் பழக்கம். இன்னொரு பக்கம் அமிதாப் பச்சன், மனித உரிமைகள் ஆணையத்தில் இருக்கிறார், என்கவுன்டருக்கு எதிரானவர்.
கன்னியாக்குமரியில் கிராமத்து அரசு பள்ளி ஆசிரியையாக துஷாரா விஜயன் பணியாற்றுகிறார். பொறுப்பான ஆசிரியை என்பதால் அனைவருக்கும் பிடிக்கும். ஊரில் கஞ்சா கடத்தல் கும்பலை பார்த்ததும் மாவட்ட எஸ் பி ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதுகிறார் துஷாரா. கடத்தல் கும்பலை தலைவர் என்கவுன்டரில் போட்டுத்தள்ளுகிறார்.
அதன்பின் துஷாரா அங்கிருந்து டிரான்ஸ்ஃபராகி சென்னை பள்ளிக்கு வருகிறார். அங்கு ஒரு மர்மமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார் துஷாரா.
இதனை விசாரிக்க தலைவர் தான் செட்டாவார் என்று அவரை வரச்சொல்ல, குற்றவாளியை எங்கிருந்தாலும் தேடிக்கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். ஆனால் தலைவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக மாறியதால் வருத்தப்படுகிறார். அந்த இடத்தில் இடைவேளைக் காட்சி வைக்கிறார்கள். இடைவேளை வரை நேர்கோட்டில் போய்க்கொண்டிருந்தது. இடைவேளைக்காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் இரண்டாம் பாதியின் கதையை நம்மால் சர்வசாதாரணமாக யூகிக்க முடிகிறது. இந்த படம் கதையாகவே சில உறுத்தல்கள் இருக்கிறது. குறிப்பாக தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை என்கவுன்டரில் போட்டுவிட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் ரஜினிகாந்த். கதைப்படி ரஜிகாந்தே ஒரு கொலைக்காரன் தான்.
நியாப்படி பார்த்தால் அவரையே இன்னொரு நல்ல அதிகாரியை வைத்து என்கவுன்டரில் போடனும். அதைச்செய்யாமல் விட்டுவிட்டார்கள். கொலை செய்த ரஜினிகாந்த் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார். அதையும் அமிதாப் பச்சம் அமர்ந்து பார்க்கிறார். நீட் கோச்சிங் சென்டர் நடத்தி அயோக்கியத்தனம் செய்யும் வில்லை என்று சொல்கிறார்கள்.
நியாயமாக பார்த்தால் நீ தேர்வை கொண்டு வந்தவர்களை தானே அயோக்கியர்கள் என்று படம் எடுத்திருக்க வேண்டும். படத்தில் தலைவர் பார்வையில் ஒரு சண்டைக்காட்சி எடுத்திருந்தார்கள், சிறப்பாக இருந்தது.
ஃபிள்ஸ் - மைனஸ்
அனிருத் மியூசிக் முதல் பாடல் நன்றாக இருந்தது. இடைவேளையில் இசை தூக்கலாக இருந்தாலும் படம் முழுக்க ஓகேவாகத்தான் இருந்தது. அமிதாப்-ன் க்ளாஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை எவ்வளவு ரியாலாக காட்ட முடியுமோ காட்டியுள்ளார். ஃபகத் பாசிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்க வேண்டுமா என யோசிக்க வைக்கின்றது என்று விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும், மொத்தத்தில் படம் எப்படி இருக்கிறது என்றால் ஒரு ஆயிரம் படத்தில் அடித்து துவைத்த கதையை திரும்பவும் எடுத்து வெச்சிருக்காங்க. படம் முழுக்க பார்க்கும் போது இதை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோண்ற வைக்கிறது.
ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒவ்வொரு காட்சியை எடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் 5, 6 ஐட்டத்தை தானே படமாக எடுப்பார்கள். ஒன்னு ரெளடிகள் பற்றி, அல்லது விவசாரயம், கஞ்சா, கார்ப்பேட் கம்பெனி பற்றி எடுப்பார்கள். இந்த படத்தில் எப்படி என்றால் மொத்தமும் இருக்கு என்று கலாய்த்து பேசியிருக்கிறார் மாறன்.