பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும்.. ஒரு வழியா அப்டேட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு..

Ajith Kumar VidaaMuyarchi
By Kathick Jun 29, 2024 10:30 AM GMT
Kathick

Kathick

Report

அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆன நிலையிலும் அப்படத்திலிருந்து First லுக் போஸ்டர் எதுவுமே வெளிவரவில்லை.

பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும்.. ஒரு வழியா அப்டேட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு.. | Vidaamuyarchi First Look Update By Lyca

இதனால் அஜித் ரசிகர்களும் சற்று கவலையில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் துவங்கிய குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து First லுக் மட்டுமல்ல Second லுக்கும் வந்துவிட்டது. விடாமுயற்சி படத்திற்கு பின் ஆரம்பமான குட் பேட் அக்லி படம் படுவேகத்தில் சென்றுகொண்டு இருக்கும் நிலையில், ரஜினி முருகன் படத்தில் வருவது போல் பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என விடாமுயற்சி காத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படத்தின் First லுக் குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளனர். அதன்படி, நாளை மாலை விடாமுயற்சி படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழியா அப்டேட் வந்துவிட்டது என ரசிகர்கள் தற்போது தான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.