கழுத்தில் காயத்துடன் ஆரவ்.. கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!! பதறவைக்கும் வீடியோ..

Ajith Kumar Lyca VidaaMuyarchi Arav
By Edward Apr 04, 2024 09:34 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது.

விடாமுயற்சி அப்டேட் கொடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை கேட்டு வந்துள்ள நிலையில், அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா, கடந்த ஆண்டு 2023ல் விடாமுயற்சி படத்திற்காக ஷூட்டிங் ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

கழுத்தில் காயத்துடன் ஆரவ்.. கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!! பதறவைக்கும் வீடியோ.. | Vidaamuyarchi Shooting Ajith Aarav Car Accident

அதில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அஜித். பக்கத்து சீட்டில் கழுத்தில் காயத்துடன் ஆரவ் உட்கார்ந்து வருகிறார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.