ராசியில்லா நடிகை என்று ஏசப்பட்ட அஜித் பட நடிகை!! அப்படியொரு அடிவாங்கிய சம்பவம்

Ajith Kumar Mohanlal
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை வித்யா பாலன். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த வித்யா பாலன், பல போல்ட்டான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.

ராசியில்லா நடிகை என்று ஏசப்பட்ட அஜித் பட நடிகை!! அப்படியொரு அடிவாங்கிய சம்பவம் | Vidya Balan Thrown Out From So Many Movies

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து தமிழில் அறிமுகமாகினார். ஆனால் இதற்கு முன் தமிழில் ஒரு விளம்பர படத்தில் நடிக்க கமிட்டாகி அதில் நடிக்க முடியாத சூழலுக்கு ஆளாகினார். அப்படி வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மோகன்லால் படத்தில் வித்யா பாலன் கமிட்டாகி இருக்கிறார்.

ஆனால் அப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது. 2000 ஆம் ஆண்டு ஆரம்பித்த இப்படத்திற்கு பின் மலையாள மொழியில் மட்டும் 7 படங்களில் கமிட்டாகி இருந்துள்ளார் வித்யா பாலன். ஆனால் மோகன்லால் படம் டிராப்பானதால் ராசியில்லாத நடிகை என்பதால் தான் அப்படம் டிராப்பாகியது என்று வதந்திகள் பரவியது.

ராசியில்லா நடிகை என்று ஏசப்பட்ட அஜித் பட நடிகை!! அப்படியொரு அடிவாங்கிய சம்பவம் | Vidya Balan Thrown Out From So Many Movies

இதனால் கமிட்டாகி இருந்த அனைத்து படத்தின் தயாரிப்பாளர்கள் வித்யா பாலனை நீக்கிவிட்டார்களாம். மேலும் தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து கூட நிக்கப்பட்டுள்ளார். மாதவன் நடிப்பில் ரன் படத்திலும் முதலில் நடிகை வித்யா பாலனை தான் நடிக்க ஒப்பந்தம் செய்து பின் நீக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் தான் தென்னிந்திய படங்களை வெறுக்க காரணமாக இருந்திருக்கிறது வித்யா பாலனுக்கு. அதன்பின் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடித்திருந்தார் நடிகை வித்யா பாலன்.

ராசியில்லா நடிகை என்று ஏசப்பட்ட அஜித் பட நடிகை!! அப்படியொரு அடிவாங்கிய சம்பவம் | Vidya Balan Thrown Out From So Many Movies