விக்னேஷ் சிவன் செய்த செயல்.. கடுப்பான இணையவாசிகள்! அப்படி என்ன ஆச்சு?
விக்னேஷ் சிவன்
நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் விக்னேஷ் சிவன்.
முதல் படமே அவருக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தாலும் அவர் மிகவும் பிரபலம் ஆனது நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தான். இப்படம் விக்னேஷ் சிவன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
விக்னேஷ் சிவனின் செயல்
இந்த படத்தின் மூலம் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அரசு ஓட்டல் ஒன்றை விலைக்கு கேட்டுள்ளதாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது, புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்த விக்னேஷ், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள 'சீகல்ஸ்' ஓட்டலை விலைக்கு கேட்டுள்ளார்.
இந்த கேள்வியால் ஷாக்கான அமைச்சர் அந்த ஓட்டல் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி சார்பில் இயங்கி வருவதால் அதனை வாங்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
தற்போது, இந்த செய்தியைப்பார்த்த ரசிகர்கள் அனைத்திற்கும் காரணம் பணத்திமிர் என்று இணையத்தில் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.